ஆபாச தேடல்கள் கூகுலில் வராமல் தடை செய்வது எப்படி?

Tamil Computer Doctor
Tamil Computer Doctor

உலகிலேயே மிக பிரபலமான தேடல் பொறியில் கூகுள் மிக மிக முக்கியமான ஒன்றாகும்.  எமக்கு இணையாளத்தில் என்ன தேவையாக இருந்தாலும் நாம் உடனே செல்வது கூகிள் இற்கு தான்.  

எமது வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகள் மனைவி தம்பி தங்கை எல்லோரும் கூகுளை  தான் பயன்படுத்துகின்றனர். பல தகவல்களை நாம் கூகிள் இல் தேடும் போது எம்மை அறியாமே சில சந்தர்ப்பத்தில் ஆபாச பதிவுகள் வர நேரிடலாம். இது பலருக்கு அசௌகரியமாக இருக்கலாம்.

அல்லது கூகிள் இல் ஆபாச வார்த்தை பயன்படுத்தி தேடும் பொது வந்து விடலாம். எம்மை அண்டி வாழப்பியவர்களிடம் இருந்து கூகுளில் ஆபாச தேடல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பாப்போம்.

முதலில் கூகுள் இற்கு சென்று சும்மா எதாவது ஒன்றை தேடுங்கள். நான் உதாரணமாக என்னுடைய பெயரை தேடி உள்ளேன். தேடிய பிறகு  Settings  இல் Search Settings ஐ தெரிவு செய்யவும்.

( மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும். ) 

Tamil Computer Doctor
Tamil Computer DoctorSearch Settings கொடுத்த அதில் Turn On Safe Search என்பதை தெரிவு செய்த பின்னர் Lock Safe Search  என்பதை கிளிக் செய்யவும்.
( மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும். ) 

Tamil Computer Doctor
Tamil Computer Doctor

அதன் பிறகு வரும் பக்கத்தில் Lock Safe Search என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
( மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும். ) 

Tamil Computer Doctor
Tamil Computer Doctor


பட்டனை கிளிக் செய்த உடன் 100% வருவதட்க்கு சிறிது நேரம் எடுக்கும் அதுவரை காத்து இருக்கவும். 100%  வந்த உடன் கீழே படத்தில்  காட்டப்பட்டு உள்ளது போலே Back To Search Settings  என்பதை கிளிக் செய்யவும்.

Tamil Computer Doctor
Tamil Computer Doctor


இறுதியாக கட்டாயம்  மறக்காமல் Back To Search Settings என்ற பக்கத்தில் கீழே Scroll செய்து Save செய்யவும். நீங்கள் Save செய்யாமல் வெளியேறினால் கூகிளில் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர் பார்க்க முடியாது.

Tamil Computer Doctor
Tamil Computer Doctor

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்று விடாமல் சரியாக செய்தால் கூகிளில் நீங்கள் ஆபாச வார்த்தை  கொண்டு தேடினாலும் உங்களுக்கு காட்டாது. அதட்கான ஆதாரம் கீழே உள்ள படத்தில் உள்ளது.

ஆதாரத்திட்காக நானே எனது கணனியில் தேடியது.


Tamil Computer Doctor
Tamil Computer Doctor


முக்கிய குறிப்பு 


இந்த செயல்பாடு கூகிளில் ஆபாச தேடல் வராமல் பாதுகாக்கும் ஆனால் நீங்கள்  ஆபாச இணையதளங்களுக்கு நேரடியாக சென்றால் ஆபாச இணையதளங்கள் வேலை  செய்யும்.

அவ்வாறான ஆபாச இணையதளங்களை உங்கள் கணனியில் தடை செய்வது எப்படி என்று இன்னொரு பதிவு உள்ளேன். அதை முழுமையாக வாசிக்க கீழே உள்ள லிங்க் இல்லை கிளிக் செய்யவும்.

இந்த இரண்டு பதிவுக்கும் உள்ள வித்தியாசம் 

  • கீழே உள்ள பதிவு ஆபாச இணையதளங்களை தடை செய்வது எப்படி?

No comments:

வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.

Powered by Blogger.