உங்கள் கணினியில் CD சிக்கிக்கொண்டதா? வெளியில் எடுக்க இலகுவழி

 நீங்கள் அடிக்கடி CD / DVD பயன்படுத்துபவரா ..?  நீங்கள் என்றாவது  உங்கள் கணினியின் CD Drive இல் இருந்து உங்கள் CD / DVD வெளியே வராமல் உங்களை மிக மோசமான நிலையில் சிக்க வைத்து உள்ளதா ..?

எத்தனை முறை CD / DVD Drive ல் உள்ள பட்டனை ( Button ) அழுத்திய போதும் வெளியில் வராமல் இருக்கும்.  இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் உங்கள் CD / DVD வெளியே வரும் என்பதை பார்க்கலாம்.

 கீழ்காணும் இரு வழிகளை கையாண்டு CD / DVD யை வெளியே எடுக்கலாம்.

1 . வழி ஒன்று 


My Computer Icon ல் Click செய்யுங்கள் உங்கள் Desktop ல் இந்த Icon இல்லை என்றால் நிச்சயம் Start Menu ல் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணினியின் Drives அனைத்தும் காட்டப்படும்.

Tamil Computer Doctor
Tamil Computer Doctor

இதில் Drives With Removable Storage என்ற பிரிவின் CD படத்துடன் ஒரு Icon இருக்கும் அல்லது சிக்கிக் கொண்ட CD / DVD ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள Package என்றால் அந்நிறுவனம் தந்துள்ள Icon அந்த Drive காட்டப்படும்.
இதன் மீது Right Click  செய்திடுங்கள்.


Tamil Computer Doctor
Tamil Computer Doctor


கிடைக்கும் Menu ல் Eject என்ற பிரிவில் Click செய்திடுங்கள் உங்கள் CD / DVD Drive ல் உள்ள Eject Button தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ் நிலையில் இந்த வழி செயல்படும்.

இதற்கும் C/D Drive திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்

2 . வழி இரண்டு


Paper Clip ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதன் ஒரு முனையை பிடித்து நீட்டுங்கள் CD / DVD Drive Button அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இது வரை நீங்கள் அதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். இப்போது நிச்சயம் இதன் உதவி தேவையாக இருக்கிறது.

இந்த துளையில் மெதுவாக பிறித்த Paper Clip ன் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும்.  சிறிது உள்ளே செலுத்தியவுடன்  அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில் சிறிய அளவு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Eject செய்யும் போது இயங்கும் Internal Lock  உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் CD / DVD Drive ன் கதவு திறக்கப்படும்.

இவ்வாறு செய்தும் CD / DVD இன் கதவு திறக்கவில்லை என்றால். கணினியை ஒரு முறை Restart செய்த பிறகு மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.


உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் Drive ன் கதவினை மறக்காமல்  மூடவும். மேலும்  Paper Clip னை  எடுத்து விடவும்.  சிலர் CD வெளியே வந்த சந்தோஷத்தில் Paper Clip ஐ எடுக்க மறந்து விடுவர் .

இது என்னுடைய முதல் பதிவு.

No comments:

வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.

Powered by Blogger.