மென்பொருள் இல்லாமல் ஆபாச இணையத்தளங்களை தடை செய்ய வேண்டுமா?

Tamil Computer Doctor
Tamil Computer Doctorநாம்  அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ பாவிக்கும் கணினியில் எமக்கு பெரும் சவாலாக இருப்பது ஆபாசமே. எம்மை அறிந்தும் அறியாமலும் ஆபாச இணையத்தளங்களுக்கு செல்வது இக்கால கட்டத்தில் எமக்கு சாதாரண ஒரு செயல்பாடாகவே உள்ளது.

எம்மையும் எமது வீட்டில் உள்ளவர்களையும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஆபாச .இணையத்தளங்களுக்குச் செல்லாமல் எம்மால் தடுக்க முடியும்.

இதற்கு எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை. உங்கள் கணினியில் சிரிய மாற்றங்கள் செய்தாலே போதும்.

நாம் இந்த பதிவுக்கு முன்னர்

கூகிளில் ஆபாச தேடல் வராமல் தடை செய்வது எப்படி? 
என்றும்
எந்த ஒரு மென்பொருளும் இன்றி சில இணையதளங்களை ஒவ்வொன்றாக நாமே தடை செய்வது எப்படி?

என்றும் பார்த்தோம்.  இந்த பதிவில் எந்த ஒரு மென்பொருளும் இன்றி ஆபாச இணையதளங்களை ஒரேயடியாக தடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நான் எனது கணினியில் செய்துள்ளேன். ( windows 7 ) உங்கள் கணினியில் windows 7 ஆக இருந்தால் இதே போன்று வரும். windows 8 , windows 10 இற்கு சற்று வித்தியாசமாக வரும்.

முதலில் உங்கள் கணினியில் இடது பக்க கீழ் மூலையில் உள்ள Start Button ஐ Click செய்யவும். Start Menu இல் வரும் Control Panel இனை Click செய்யவும்.

( உங்கள் மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்கவும். )

Tamil Computer Doctor
Tamil Computer DoctorControl Panel  இனை Click செய்த பிறகு வலது பக்க மேல் மூலையில் View By என்பதில்  Small Icons என்பதை தெரிவு செய்க. அதில்  Network And Sharing Center என்பதை Click  செய்யவும்.

( உங்கள் மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்கவும். )


Tamil Computer Doctor
Tamil Computer Doctor
Network And Sharing Center இனை  Click செய்த பிறகு இடது பக்கத்தில் உள்ள Change Adapter Setting என்பதை Click செய்யவும்.

( உங்கள் மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்கவும். )


Tamil Computer Doctor
Tamil Computer Doctor


Change Adapter Settings இனை Click செய்த பிறகு கீழ் உள்ளது போல வரும். அதில் நீங்கள் எதில் Internet இணை  பயன்படுத்துகிரீர்களோ அதனை Right Click செய்யவும்.  பிறகு Propetties ஐ Click செய்யவும்.

நான் WIFI மூலமாக இணையம் பயன்டுத்துகிறேன். அதனால் Wireless Network Connection இனை தெரிவு செய்து உள்ளேன். Dongle மூலமாகவோ Cable மூலமாகவோ Internet பயன்டபடுத்துபவராக இருந்தால் உங்கள் தெரிவு மாறுபடும்.

உதாரணமாக Cable மூலமாக இருந்தால் Local Area Connection இனை Right Click செய்ய வேண்டும்.
( உங்கள் மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்கவும். )


Tamil Computer Doctor
Tamil Computer Doctor


Propetties ஐ Click செய்தால் வருவதில் Internet Protocol Version 4 ( TCP / IPv6 ) என்பதை தெரிவு செய்து Propetties ஐ Click செய்யவும்.
( உங்கள் மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்கவும். )


Tamil Computer Doctor
Tamil Computer Doctor


கீழே படத்தில் உள்ளவாறு Use The Following DNS Server Addressess என்பதை தெிவு செய்யவும். தெரிவு செய்தவுடன் வரும் பெட்டியில் 

மேல் பெட்டியில் 185.228.168.169 என்றும் 
கீழ் பெட்டியில் 185.228.169.169 எனவும் பதிந்து OK பண்ணவும்.

( உங்கள் மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்கவும். )

Tamil Computer Doctor
Tamil Computer Doctorஇருதியாகவும் கட்டாயமாகவும்  OK செய்த பிறகு Close என்பதை Click செய்யவும். இல்லாவிட்டால் நீங்கள் செய்தவை அனைத்தும் வீணாகி விடும்.

( உங்கள் மேலதிக உதவிக்கு கீழ் உள்ள படத்தை பார்கவும். )


Tamil Computer Doctor
Tamil Computer Doctor
இப்போது உங்கள் Browser இற்கு சென்று எந்த ஆபாச இணையத்தளளங்களுக்கும் சென்று பாருங்கள். நிச்சயம் தடை பண்ண பட்டு இருக்கும்.

நான் எனது கணினியில் செய்து பார்ததன் ஆதாரம் கீழே இணைத்துள்ளேன்.

Tamil Computer Doctor
Tamil Computer DoctorNo comments:

வரவேர்க்கத்தக்க கருத்துக்களை எதிர்பார்கிறோம். தயவு செய்து அநாகரீகமான கருத்துக்களை இட வேண்டாம்.

Powered by Blogger.